/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஏமாற்றிய மழையால் முளைக்காமல் போன பயிர்கள் விவசாயிகள் பரிதவிப்பு
/
ஏமாற்றிய மழையால் முளைக்காமல் போன பயிர்கள் விவசாயிகள் பரிதவிப்பு
ஏமாற்றிய மழையால் முளைக்காமல் போன பயிர்கள் விவசாயிகள் பரிதவிப்பு
ஏமாற்றிய மழையால் முளைக்காமல் போன பயிர்கள் விவசாயிகள் பரிதவிப்பு
ADDED : செப் 29, 2025 06:42 AM

திருச்சுழி, : திருச்சுழி அருகே பயிர்களை விதைத்தும் மழை ஏமாற்றியதாலும், விதைத்த விதைகளை காட்டுப்பன்றிகள் பாழாக்குவதாலும் விவசாயிகள் விரக்தியில் உள்ளனர்.
திருச்சுழி அருகே கல்லுமடம், கரிசல்குளம், ஆலடிபட்டி, கல்யாண சுந்தரபுரம், மீனாட்சிபுரம் உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட கிராமங்களில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளன. ஆடி மாத கடைசியில் மழை பெய்யக்கூடும் என்ற நிலையில் ஏமாற்றி விட்டது. இதனால் நிலத்தை உழுது பயிரிட்டும் வீணானது. இருக்கின்ற ஈரப்பதத்தில் விதைகள் அரைகுறையாக முளைத்துள்ளன. இவற்றை இரவு நேரங்களில் காட்டுப்பன்றிகள் தோண்டி எடுத்து தின்று விடுகின்றன. இதனால் விவசாயிகள் நிலை குலைந்து போய் விரக்தியில் உள்ளனர்.
இது குறித்து இப்பகுதி விவசாயிகள்: பருவத்திற்கு மழை பொய்த்து விட்டதால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிட்டும் பயனில்லாமல் போய்விட்டது. விதைகள் முளை விட்டுள்ளன. ஆனால் போதுமான தண்ணீர் இல்லாமல் இவற்றின் முளைப்பு திறன் குறைந்து விடும். மழையும் பொய்த்து போய் விட்டதால் விதைத்த விதைகள் வீணாகி விட்டன.
நாங்கள் மீண்டும் ஆயிரக்கணக்கான ரூபாய் செலவழித்து புதியதாக விதைகளை வாங்கி நிலத்தை உழுது பயிரிட வேண்டிய நிலையில் உள்ளோம். இதில் காட்டுபன்றிகளின் தொல்லைகளும் அதிகமாக இருப்பதால் விவசாயிகளால் சமாளிக்க முடியாமல் திணறி வருகிறோம், என்றனர்.
ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பு தாலுகாவில் பெரும்பாலான கண்மாய்களில் தண்ணீர் இன்றி வறண்டு காணப் படுகிறது.
எப்படியாவது வடகிழக்கு பருவ மழை கை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் தங்கள் விளைநிலங்களை மக்காச்சோள சாகுபடிக்கு விவசாயிகள் தயார் செய்துள்ளனர்.
கடந்த ஆண்டு போல இந்த ஆண்டும் புரட்டாசி மாதத்தில் மழை பெய்யுமா என்ற எதிர்பார்ப்புடன் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.