/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அறுவடைக்கு தயராகும் பொங்கல் கரும்புகள் அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி

ADDED : ஜன 01, 2025 07:33 AM

விருதுநகர் :  பொங்கல் பரிசு தொகுப்பில் இந்தாண்டும் முழுக்கரும்பு வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளதால்விருதுநகர் அருகே முருகனேரியில் நடவு செய்த கரும்பு விவசாயிகள் அறுவடைக்கு மகிழ்ச்சியாக தயராகி வருகின்றனர்.
மாவட்டத்தில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பு பகுதிகளில் சர்க்கரை உற்பத்திக்கு பயன்படும் நாட்டு கரும்புகள் பயிரிடப்பட்டு வருகின்றன. விருதுநகர் அருகே முருகனேரி பகுதியில்  பொங்கலின் போது சாப்பிடும் கரும்புகள் பயிரிடப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் இங்கிருந்து விளைவிக்கப்பட்ட கரும்புகள் விருதுநகர், மதுரை மாவட்ட சந்தைகளில் விற்பனையாகும். இந்நிலையில் 2021, 22, 23 ஆண்டு பொங்கல் பரிசு வழங்கிய போது முழு கரும்புகள் விநியோகிக்கப்பட்டன. முருகனேரி விவசாயிகள் அதிகளவில் இந்தாண்டும்பயிரிட்டுள்ளனர்.
நேற்று முன்தினம்அரசு பொங்கல் பரிசில் முழுக்கரும்பு சேர்த்து வழங்கப்படும் என அறிவித்தது. இதனால் வழக்கமாக டிசம்பர் இறுதியில் பாதி அறுவடை முடிந்துள்ள கரும்புகள் முழுதும் அறுவடை செய்யப்படாமல் இருந்தது.
நேற்றைய அறிவிப்பின் எதிரொலியால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து அறுவடைக்கு தயாராகி வருகின்றனர்.