/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
திருச்சுழியில் காட்டு பன்றிகளால் மக்காச்சோள பயிர்கள் பாழ் விவசாயிகள் பரிதவிப்பு

ADDED : நவ 02, 2025 04:19 AM

திருச்சுழி: திருச்சுழி அருகே உள்ள கிராமங்களில் முளைவிட்டு வந்த மக்காச்சோள பயிர்களை காட்டுப்பன்றிகள் தோண்டி எடுத்து பாழாக்கியதில் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருச்சுழி அருகே வடக்குநத்தம், தெற்கு நத்தம், ராஜகோபாலபுரம், பரளச்சி, மேலையூர், செங்குளம் உள்ளிட்ட கிராமங்களில 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டு முளையிட துவங்கியுள்ள நிலையில், கூட்டமாக வந்த பன்றிகள் கால்களால் தோண்டி எடுத்து முளைவிட்ட பயிர்களை தின்று பாழாக்கி விட்டன.
ஒட்டுமொத்த ஏக்கர்களிலும் பயிர்கள் பாழாகி போனதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து விவசாயிகள்: ஏக்கருக்கு 10 ஆயிரத்திற்கு மேல் செலவளித்து மக்காச்சோளம் பயிரிட்டுள்ளோம். முளை விட துவங்கிய நிலையில் காட்டுப்பன்றிகள் நேற்று பயிர்களை பாழாக்கி விட்டது. தற்போது காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த முடியவில்லை. நாங்கள் போராடி பார்த்து ஒன்றும் செய்ய இயலாமல் உள்ளோம். அரசு விவசாயிகளை காப்பாற்ற போர்க்கால நடவடிக்கை எடுத்து பன்றிகளை கட்டுப்படுத்த வேண்டும். இல்லை எனில் நாங்கள் விவசாயத்தை கைவிடும் நிலையில் உள்ளோம்.