/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விவசாயிகள் மனு கொடுக்கும் போராட்டம்
/
விவசாயிகள் மனு கொடுக்கும் போராட்டம்
ADDED : பிப் 04, 2024 04:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : 2023 டிச. 2024 ஜன. வெள்ள நிவாரணத்திற்கு சரியாக கணக்கெடுப்பு நடத்தாத வேளாண், வருவாய்த்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும்,மக்காசோளம், கம்பு, உளுந்து, பாசிப்பயறு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம் வழங்க கோரிதமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.
மாநில தலைவர் நாராயணசாமி தலைமை வகித்து பேசினார். பொருளாளர் சுப்பாராஜ், மாவட்ட தலைவர் பாஸ்கரன், செயலாளர் தங்கவேல் முன்னிலை வகித்தார். ஒன்றிய தலைவர்கள் பரந்தாமன், வெங்கட்ராமானுஜம், ஜெயபாண்டியன் பங்கேற்றனர்.