/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மழையை எதிர்பார்த்து காத்திருக்கும் விவசாயிகள் தவிப்பு; விதைத்து முளைத்தும் முளைக்காமல் இருப்பதால்
/
மழையை எதிர்பார்த்து காத்திருக்கும் விவசாயிகள் தவிப்பு; விதைத்து முளைத்தும் முளைக்காமல் இருப்பதால்
மழையை எதிர்பார்த்து காத்திருக்கும் விவசாயிகள் தவிப்பு; விதைத்து முளைத்தும் முளைக்காமல் இருப்பதால்
மழையை எதிர்பார்த்து காத்திருக்கும் விவசாயிகள் தவிப்பு; விதைத்து முளைத்தும் முளைக்காமல் இருப்பதால்
ADDED : அக் 09, 2024 04:19 AM
சாத்துார் எம். நாகலாபுரம், மாயூர்நாதபுரம், பாப்பாகுடி, நென்மேனி, என்.மேட்டுப்பட்டியில் மானாவாரியில் உளுந்து, பாசிப்பயறு, மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்ட பயிர்களின் விதைகளை கடன் வாங்கி விதைத்துள்ளனர்.
இந்தப் பகுதிகளில் ஆகஸ்ட் மாதம் மழை பெய்தது அதன் பின்னர் மழை பெய்யவில்லை இருந்த போதும் செப்டம்பர் மாதத்திலேயே பருவ மழை துவங்கிவிடும் என்ற எண்ணத்தில் மானாவாரி நிலத்தில் ஏக்கருக்கு ரூ15,000 வரை செலவழித்து மக்காச்சோளம் பருத்தி உள்ளிட்ட பயிர்களின் விதைகளை விவசாயிகள் வயலில் விதைத்தனர்.
ஆனால் செப்டம்பர் மாதம் முழுவதும் மழை பெய்யாமல் ஏமாற்றி விட்டது. அக்டோபர் மாதத்தில்மழை பெய்து விடும் என விவசாயிகள் எதிர்பார்த்த நிலையில் அக்டோபரிலும் இங்கு மழை பெய்யவில்லை.
மண்ணில் இருந்த ஈரப்பதத்துக்கு விதை முளைத்தும் முளைக்காமலும் உள்ளது. இந்தப் பகுதி விவசாயிகள் கடந்த ஆண்டு செய்திருந்த பயிர் காப்பீடு இழப்பீடு தொகை கிடைக்காத நிலையில் கையில் இருந்த பணத்துக்கு விதை வாங்கி விதைத்து மேலும் விவசாயம் செய்ய பணமின்றி தவித்து வருகின்றனர்.
வழக்கமாக அக்டோபர் மாதத்தில் வி.ஏ.ஓ.க்கள் மானாவாரி நிலத்தை பார்வையிட்டு அடங்கல் சான்று வழங்கி விடுவர். இந்த ஆண்டு மழை பெய்ய தாமதமாகி வருவதால் வி.ஏ.ஓ.க்கள் அடங்கல் வழங்க மறுத்து வருகின்றனர். அடங்கல் சான்று இருந்தால் தான் விவசாயிகளால் கூட்டுறவு வங்கியில் விவசாய தங்க நகை கடன் பெற முடியும்.
தற்போது விவசாயிகளால் வங்கியில் நகை கடன் கூட பெற முடியாத நிலை உள்ளது. வெளியில் பணம் கடன் வாங்கி விதை விதைத்த விவசாயிகள் தற்போது மழை பெய்ய தாமதமாகி வருவதால் விதைகள் முளைக்காமல் போய்விடுமோ என கவலையில் தவித்து வருகின்றனர்.
மேலும் மானாவாரி பயிர் செய்யும் விவசாயிகள் தற்போது பயிர் காப்பீடும் செய்யமுடியாமல் உள்ளனர். பயிர் காப்பீடு செய்வதற்கான அறிவிப்பை அரசு வெளியிடாமல் காலதாமதப்படுத்தி வருவதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.
ஏக்கருக்கு ரூ15,000 வரை செலவழித்த விவசாயிகள் தற்போது மேலும் விவசாய பணிசெய்ய முடியாது செய்வதறியாது அவதிப்படுகின்றனர்.