/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரோட்டில் மாடுகளை திரிய விட்ட உரிமையாளர்களுக்கு அபராதம்
/
ரோட்டில் மாடுகளை திரிய விட்ட உரிமையாளர்களுக்கு அபராதம்
ரோட்டில் மாடுகளை திரிய விட்ட உரிமையாளர்களுக்கு அபராதம்
ரோட்டில் மாடுகளை திரிய விட்ட உரிமையாளர்களுக்கு அபராதம்
ADDED : டிச 09, 2024 04:57 AM
சிவகாசி: தினமலர் செய்தி எதிரொலியாக சிவகாசி அருகே செங்கமல நாச்சியார் புரத்தில் நடுரோட்டில் திரிந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் அபராதம் விதிக்கப்பட்டது.
சிவகாசியில் சாட்சியாபுரம் ரயில்வே மேம்பால பணிகள் நடந்து வருகின்றது. இதனால் அனைத்து கனரக வாகனங்கள், நகர் பஸ்கள், பள்ளி கல்லுாரி பஸ்கள், கார் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் மாற்று பாதையான செங்கமல நாச்சியாபுரம் ரோட்டில் வந்து செல்கின்றன. இதனால் இந்த ரோட்டில் எப்போதுமே போக்குவரத்து நிறைந்திருக்கும். இந்நிலையில் செங்கமலநாச்சியார்புரத்தில் நடு ரோட்டில் மாடுகள் நடமாடுகின்றன.
தவிர ஒரு சில மாடுகள் ரோட்டிலேயே படுத்து விடுகின்றன. இதனால் டூவீலரில் செல்பவர்கள் தடுமாறி கீழே விழுகின்றனர். மேலும் வாகனங்களில் செல்பவர்கள் ஒலி எழுப்புகையில் மாடுகள் இரண்டு ஓடும்போது வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.
இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக ஊராட்சி நிர்வாகம் சார்பில் ரோட்டில் கவனிப்பாரற்று திரிந்த 8 மாடுகளுக்கு தலா ரூ. 3000, மூன்று கன்றுகளுக்கு தலா ரூ. 1000 என அதன் உரிமையாளர்களுக்கு அபராதம்விதிக்கப்பட்டது.