/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விஜய கரிசல்குளத்தில் விரல் ரேகை ஆட்டக்காய்
/
விஜய கரிசல்குளத்தில் விரல் ரேகை ஆட்டக்காய்
ADDED : ஜன 02, 2025 12:43 AM

சிவகாசி:விருதுநகர் மாவட்டம் விஜயகரிசல் குளம் மூன்றாம் கட்ட அகழாய்வில் விரல் ரேகை பதிந்த சுடு மண்ணால் ஆன ஆட்டக்காய் கண்டெடுக்கப்பட்டது.
விஜய கரிசல்குளத்தில் மூன்றாம் கட்ட அகழாய்வில் இதுவரையிலும் தோண்டப்பட்ட 16 குழிகளில் உடைந்த நிலையில் சுடு மண் உருவ பொம்மை,  வட்ட சில்லு, தங்க மணி, சூது பவள மணி உள்ளிட்ட 2930  பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தற்போது விரல் ரேகை பதிந்த நிலையில் சுடு மண்ணால் ஆன ஆட்டக்காய் கண்டெடுக்கப்பட்டது.
அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் பொன்னுச்சாமி கூறுகையில், முன்னோர் பொழுதுபோக்கிற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். இந்த ஆட்டக்காயில் விரல் ரேகை பதிந்துள்ளது.
இதனை தயாரிக்கும் போது எதிர்பாரா விதமாக ரேகை பதிந்திருக்கலாம். இதனை ஆய்வுக்கு உட்படுத்தி ஆணின் ரேகையா, பெண்ணின் ரேகையா என கண்டறியப்படும், என்றார்.

