
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார்-மதுரை ரோட்டில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில் ஒரு சிறிய மலைக்குன்று உள்ளது.
இங்கு வளர்ந்திருந்த செடி,கொடிகள் வெயிலுக்கு காய்ந்து சருகாகி கிடந்தது. நேற்று இரவு 7:30 மணிக்கு மலையில் திடீரென தீப்பிடித்து செடிகள், மரக்கன்றுகள் எரிந்தது. தகவலறிந்த தீயணைப்பு மீட்பு பணிகள் நிலைய அலுவலர் சுந்தர்ராஜன் தலைமையில் குழுவினர் தீயை அணைத்தனர்.