ADDED : பிப் 04, 2024 11:38 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையத்தின் சார்பில் சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தீத்தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது.
வட்டார போக்குவரத்து அலுவலர் இளங்கோ தலைமை வகித்தார். போக்குவரத்து ஆய்வாளர் பூர்ணலதா முன்னிலை வகித்தார். தீயணைப்பு துறை அலுவலர் முத்துச்செல்வம் தலைமையிலான குழுவினர் தீ தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி அளித்தனர்.
இதில் போக்குவரத்து அலுவலர்கள், வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர் உரிமம் பெற வந்தவர்கள் பங்கேற்றனர்.

