/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பரளச்சியில் தேவை தீயணைப்பு நிலையம்
/
பரளச்சியில் தேவை தீயணைப்பு நிலையம்
ADDED : பிப் 08, 2025 04:39 AM
திருச்சுழி: பரளச்சியில் தீயணைப்பு நிலையம் வேண்டுமென மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கின்றனர்.
திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது பரளச்சி. இதை சுற்றி செங்குளம், மேலையூர், வாகைகுளம், வடக்கு நத்தம், தெற்குநத்தம், ராஜகோபாலபுரம் உட்பட 75 கிராமங்கள் உள்ளன.
இந்த கிராமங்களுக்கு பரளச்சி முக்கிய சந்திப்பாக உள்ளது.
இந்த கிராமங்களில் தீ விபத்து ஏற்பட்டால் 30 கி.மீ., துாரமுள்ள திருச்சுழிக்கும், 35 கி.மீ., துாரமுள்ள அருப்புக்கோட்டை தீயணைப்பு துறைக்கு தகவல் சொல்லி, அவர்கள் வருவதற்குள் நிலைமை மோசமாக விடுகிறது.
மற்ற கிராமங்களுக்கு மைய பகுதியாக உள்ள பரளச்சியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்பது மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பாக உள்ளது.
இதுகுறித்து, இந்திய கம்யூனிஸ்ட் திருச்சுழி ஒன்றிய செயலாளர் செல்வம்: பல ஆண்டுகளாக பரளச்சியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
தீ விபத்து ஏற்படும் காலங்களில் அருப்புக்கோட்டை, திருச்சுழி தீயணைப்பு துறைக்கு தகவல் சொல்லி வருவதற்குள் அதிக நேரம் ஆவதால் விபத்தின் தன்மை அதிகமாகி விடுகிறது.
அரசு பரளச்சியில் தீயணைப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.