ADDED : டிச 31, 2024 04:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தின் பொருளாதாரத்தின் அச்சாணியாக விளங்கும் பட்டாசு ஆலைகளின் பங்களிப்பை பெருமைப்படுத்தும் விதமாகவும், நவீன தொழில்நுட்பங்களுடன் தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை மக்களுக்கு காட்சிப்படுத்தும் விதமாகவும், நவீன தொழில்நுட்பங்களுடன் தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை மக்களுக்கு காட்சிப்படுத்தும் விதமாகவும், இன்று(டிச.31) இரவு 7:00மணி முதல் விருதுநகர் மதுரை ரோட்டில் உள்ள கே.வி.எஸ்., ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், வான வேடிக்கை நிகழ்வு நடக்கிறது.
ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும், சோனி பயர் ஒர்க்ஸ், அணில் பயர் ஒர்க்ஸ் நிறுவனத்தினர் செய்கின்றனர். மாவட்ட நிர்வாகத்தால் பாதுகாப்பான முறையில்செய்யப்படுவதால் மக்கள் பங்கேற்று வானவேடிக்கையை காணலாம் என கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்தார்.