/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இன்னாசியார் சர்ச் திருவிழா கொடியேற்றம்
/
இன்னாசியார் சர்ச் திருவிழா கொடியேற்றம்
ADDED : ஜூலை 19, 2025 12:25 AM

விருதுநகர்: விருதுநகர் இன்னாசியார் சர்ச் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.விருதுநகர் மறைவட்ட அதிபரும், சர்ச் பாதிரியாருமான அருள் ராயன், உதவி பாதிரியார் பிரின்ஸ், முன்னிலையில் தேனி மாவட்டம் கம்பம் ஆரோக்கிய அன்னை சர்ச் பாதிரியார் பாரிவளன் இன்னாசியார் உருவம் பொறித்த கொடியை ஏற்றி விழாவை துவக்கினார்.
திருப்பலி நடந்தது. 10 நாட்கள் நடக்கும் இவ்விழாவில் தினசரி மாலை நவநாள் திருப்பலி, மறையுரை நடக்கிறது. முக்கிய நிகழ்வான தேர்பவனி ஜூலை 26 மாலை 6:15 மணிக்கு நடக்கிறது.
10வது நாளான ஜூலை 27ல் திருவிழா திருப்பலியும், முதல் திருவிருந்து திருப்பலியும் நடந்து, மாலை 5:45 மணிக்கு நற்கருணை பவனியுடன் கொடி இறக்கம் செய்யப்பட்டு திருவிழா முடிகிறது.