/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சர்க்கரை நோயாளிகள் நலனுக்காக பாத பாதிப்பு; மருத்துவ மையங்கள்
/
சர்க்கரை நோயாளிகள் நலனுக்காக பாத பாதிப்பு; மருத்துவ மையங்கள்
சர்க்கரை நோயாளிகள் நலனுக்காக பாத பாதிப்பு; மருத்துவ மையங்கள்
சர்க்கரை நோயாளிகள் நலனுக்காக பாத பாதிப்பு; மருத்துவ மையங்கள்
ADDED : நவ 04, 2024 09:52 PM
விருதுநகர் ; தமிழகத்தில் சர்க்கரை நோயாளிகளின் நலனிற்காக 2336 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 299 அரசு மருத்துவமனைகளில் பாத பாதிப்பு மருத்துவ மையங்கள் நிறுவப்பட்டு சிகிச்சை அளிக்கப்படவுள்ளது.
தமிழகத்தில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோருக்கு கால்களில் நாள்பட்ட புண் ஏற்படுகிறது. இதை கவனிக்காமல் இருந்து பாதிப்பு முற்றிய பின் உறுப்புகள் அகற்றப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த பாதிப்புகளுக்கான சிகிச்சைகள் ஏற்கனவே அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்தவமனைகளில் வழங்கப்படுகிறது.
இதை ஊரகப்பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் விரிவுபடுத்த அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவர்கள் மூலம் ஆக. 14ல் பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
இதையடுத்து பாதம் பாதுகாப்போம் திட்டத்தின் கீழ் தற்போது 2336 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 299 அரசு மருத்துவமனைகள், 36 அரசு மருத்துவக்கல்லுாரிகளில் பாத பாதிப்பு மருத்துவ மையங்கள் நிறுவப்படவுள்ளது.
இதன் மூலம் அந்தந்த பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் சர்க்கரை நோயாளிகளுக்கு கால், அடிப்பாதத்தில் வரும் புண் துவக்கத்திலேயே கண்டறியப்பட்டு சிகிச்சை மூலம் சரிசெய்து விடலாம்.
இதில் நாள்பட்ட புண் உள்ளவர்களை கண்டறிந்து அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைகளில் உள்நோயாளியாக அனுமதித்து தொடர்ந்து கண்காணித்து பூரண குணமடைய செய்ய முடியும்.