/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வெளிமாநில தொழிலாளர்கள் பதிவு செய்ய அழைப்பு
/
வெளிமாநில தொழிலாளர்கள் பதிவு செய்ய அழைப்பு
ADDED : அக் 13, 2024 04:09 AM
விருதுநகர்: தொழிலாளர் உதவி ஆணையர் சமூக பாதுகாப்பு திட்டம் காளிதாஸ் செய்திக்குறிப்பு: வெளிமாநிலத்தில் இருந்து வந்து விருதுநகர் மாவட்டத்தில் கட்டுமான பணியில் ஈடுபடும் தொழிலளர்கள், இணையம் சார்ந்த தொழில்களில் ஈடுபடும் தொழிலாளர்களை கண்டறிந்து அலுவலகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு உதவி மையம் மூலம் ஏற்கனவே உறுப்பினர் சேர்க்கைக்கான பதிவுகள் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலவாரியங்களின் இணையத்தளம் www.tnuwwb.tn.gov.inல் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
இதை தொடர்ந்து வெளிமாநில கட்டுமான தொழிலாளர்கள், இணையம் சார்ந்த தொழில்களில் ஈடுபடும் தொழிலாளர்களை அதிக எண்ணிக்கையில் பதிவு செய் திங்கள் தோறும் காலை 10:00 மணி முதல் 12:00 மணி வரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் உறுப்பினர் சேர்க்கைக்கான முகாம் நடக்க உள்ளதால் தொழிலாளியின் பிறந்த தேதிக்கான ஆவணம், ஆதார் எண், ரேஷன் கார்டு, வங்கி கணக்கு புத்தகம், ஆகிய ஆவணங்களுடன் முகாமில் கலந்து கொள்ளலாம், என்றார்.