/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி துவக்கம்
/
போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி துவக்கம்
ADDED : ஏப் 27, 2025 07:14 AM
விருதுநகர் : டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1, 2, 2ஏ, 4 உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட மையம் சார்பில் இலவச பயிற்சி வழங்கப்படுகிறது.
இன்று (ஏப்., 27) திருத்தங்கல் செங்கமலநாச்சியார்புரம் ரோட்டில் உள்ள மீனாட்சி டியூஷன் சென்டரில் ஓய்வுபெற்ற கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் ரவீந்திரன் பயிற்சியை துவக்கி வைக்கிறார். சனி, ஞாயிறுகளில் காலை 10:00 முதல் மாலை 4:30 மணி வரை பயிற்சி நடைபெறவுள்ளது.
ஒவ்வொரு வாரமும் பாடவாரியாக தேர்வு நடத்தப்பட்டு, அனுபவமிக்க ஆசிரியர்களால் பயிற்சி வழங்கப்படுகிறது. கடந்த 30 ஆண்டுகளில் பயிற்சி பெற்ற 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
இந்தாண்டுக்கான டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1, 4 போட்டித் தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் அரசு வேலை பெற விருப்பமுள்ளவர்கள் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் குருசாமியை 94860 11955ல் தொடர்பு கொள்ளலாம்.

