/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சதுரகிரியில் பவுர்ணமி வழிபாடு: பக்தர்கள் தரிசனம்
/
சதுரகிரியில் பவுர்ணமி வழிபாடு: பக்தர்கள் தரிசனம்
ADDED : நவ 16, 2024 02:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்தூர்:சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஐப்பசி மாத பவுர்ணமி வழிபாட்டை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
நேற்று காலை 6:30 மணி முதல் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள ஓடைகளில் நீர் வரத்து இருந்ததால் குளித்து மகிழ்ந்தனர்.
கோயிலில் மாலை 6:00 மணி முதல் பவுர்ணமி வழிபாடு பூஜைகள் துவங்கியது. முதலில் சுந்தர மகாலிங்கத்திற்கும், அதனைத் தொடர்ந்து சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி, கருப்பசாமி சன்னதிகளில் பூஜாரிகள் பவுர்ணமி வழிபாடு நடத்தினர்.இதனை பக்தர்கள் தரிசித்தனர்.