/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வேடிக்கை: விளம்பர சுவராக மாறும் சென்டர் மீடியன்கள்: வாகன ஓட்டிகளின் கவன சிதறலால் விபத்து அபாயம்
/
வேடிக்கை: விளம்பர சுவராக மாறும் சென்டர் மீடியன்கள்: வாகன ஓட்டிகளின் கவன சிதறலால் விபத்து அபாயம்
வேடிக்கை: விளம்பர சுவராக மாறும் சென்டர் மீடியன்கள்: வாகன ஓட்டிகளின் கவன சிதறலால் விபத்து அபாயம்
வேடிக்கை: விளம்பர சுவராக மாறும் சென்டர் மீடியன்கள்: வாகன ஓட்டிகளின் கவன சிதறலால் விபத்து அபாயம்
ADDED : ஆக 09, 2025 02:56 AM

பெருகி வரும் மக்கள் தொகை, வாகன எண்ணிக்கைக்கு ஏற்ப சாலைகளை விரிவாக்கம் செய்து கொண்டே செல்ல வழி இல்லை. எனவே விபத்து களை தடுக்க ஒளிரும் விளக்கு, எச்சரிக்கை பலகை உள்ளிட்டவைகளை அரசு ஏற்படுத்தி வருகிறது.
இருப்பினும் வாகனங்களை ஒரு பக்கத்திலிருந்து மறுமுனைக்கு வேகமாக முந்தும் வாகன ஓட்டிகளை கட்டுப்படுத்தும் நோக்கில் சென்டர் மீடியன்கள் நெடுஞ்சாலை துறையினரால் அமைக்கப்பட்டு வருகிறது. அவைகள் எளிதில் கண்களுக்கு புலப்படும் வகையில் வெள்ளை, கருப்பு நிற வண்ணங்களை இதன் மீது பூசுகின்றனர்.
மாவட்டத்தில் உள்ள பெரும்பான்மையான சென்டர் மீடியன் சுவற்றில் அரசியல் கட்சியினர், சமூக அமைப்பினர், வர்த்தக நிறுவனங்கள் சார்பில் சுவரொட்டிகள் ஓட்டி விடுகின்றனர். இதனால் சென்டர் மீடியன்கள் முழுவதும் சுவரொட்டிகள் ஆக்கிரமித்துள்ளன.
நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஊழியர்களால் சுவரொட்டிகள் கிழிக்கப்பட்டு சுத்தம் செய்யும் பணிகள் செய்து வர்ணம் தீட்டினாலும் அதே வேகத்தில் மீண்டும் அவற்றில் சுவரொட்டிகள், ஸ்டிக்கர்கள் ஒட்டப்படுகின்றன.
சாலை விதிகளை மதிக்காமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கும் அதிகாரிகள் அனுமதியின்றி அரசு சுவற்றில் சுவரொட்டிகள் ஒட்டுவதை வேடிக்கை பார்த்து வருகின்றனர்.
ராஜபாளையத்தில் வெம்பக்கோட்டை நெடுஞ்சாலை, மதுரை--கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் இந்த அவலம் தொடர்கிறது. இதனிடையே பள்ளிகள் அருகே அமைந்துள்ள சென்டர் மீடடியன்களில் இதன் பாதிப்பு அதிகம்.
மக்கள் வரிப்பணத்தில் அமைக்கப்படும் இது போன்ற வற்றில் விதி மீறல்களை ஈடுபடுபவர்கள் மீது போக்குவரத்து போலீசார், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இணைந்து அபராதம் உள்ளிட்ட நட வடிக்கை மேற்கொள்ளாமல் மீண்டும் இச் செயல்களில் ஈடுபடாமல் இருக்கும் படி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என. சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.