நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்திராயிருப்பு: நத்தம் பட்டி கிராமங்களில் கஞ்சா விற்பனை நடப்பதாக தனிப்படை போலீசாருக்கு கிடைத்த தகவலின்பேரில் நேற்று பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர்.
அப்போது தலமலையான் கோவில் அருகில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இலந்தைகுளம் ஈசாக் 19, கோட்டையூர் சுப்பையா 27 ஆகியோரை போலீசார் மடக்கி பிடித்தபோது சுப்பையா தப்பி ஓடிவிட்டார்.
பிடிபட்ட ஈசாக் என்பவரிடமிருந்து 1.150 கி.கி. கஞ்சா பிடிபட்டது. நத்தம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.