/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குழந்தை பெற்ற சிறுமி மாணவர் தலைமறைவு
/
குழந்தை பெற்ற சிறுமி மாணவர் தலைமறைவு
ADDED : அக் 18, 2024 03:05 AM
அருப்புக்கோட்டை:விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே 16 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்ததை அடுத்து அதற்கு காரணமான கல்லுாரி மாணவரை போலீசார் தேடிவருகின்றனர்.
அருப்புக்கோட்டை அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியுடன் அதே பகுதியைச் சேர்ந்த கல்லுாரி மாணவர் கணேசன் 20, பழகி உள்ளார்.
இதில் சிறுமி கர்ப்பம் அடைந்தார். இது குறித்து சிறுமியிடம் பெற்றோர் கேட்டபோது மாணவர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அக். 14 ல் சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. ரத்தபோக்கு அதிகமானதால் அச்சிறுமியை விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தலைமறைவான கல்லுாரி மாணவரை அருப்புக்கோட்டை மகளிர் போலீசார் தேடிவருகின்றனர்.