/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விபத்தில் நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
/
விபத்தில் நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
ADDED : ஆக 20, 2025 07:00 AM
சாத்துார் : சாத்துரில் விபத்தில் நஷ்ட ஈடு தொகை வழங்காததை தொடர்ந்து அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்சை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.
சாத்துாரை சேர்ந்தவர் செல்வராஜ், 43. 2016ல் நாட்டார்மங்கலம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ் மோதி உயிரிழந்தார்.
இவர் மனைவி ஜான்சி ராணி மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.மனுவை விசாரித்த நீதிமன்றம் கடந்த ஆண்டு அரசு விரைவு போக்குவரத்து கழக நிர்வாகம் மனுதாரருக்கு ரூ 18 லட்சத்து 86 ஆயிரத்து 737 இழப்பீடு வழங்க உத்திரவிட்டது.
எஸ்.இ.டி.சி. நிர்வாகம் குறிப்பிட்ட நாட்களுக்குள் இழப்பீடு தொகையை நீதிமன்றத்தில் செலுத்தாதால் சாத்துார் சார்பு நீதிமன்ற நீதிபதி முத்து மகாராஜன் அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்திரவிட்டார். இதனைத் தொடர்ந்து நீதிமன்ற ஊழியர்கள் எஸ்.இ.டி.சி அரசு பஸ்சை ஜப்தி செய்து நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றனர்.