/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நான்கு வழிச்சாலை மேம்பாலத்தில் செல்லும் அரசு பஸ்கள்; *தவிப்பில் நத்தம்பட்டி, லட்சுமியாபுரம் மக்கள் நான்கு வழிச்சாலை மேம்பாலத்தில் செல்லும் அரசு பஸ்களால் தவிப்பு

ADDED : நவ 28, 2024 04:50 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நான்கு வழிச்சாலை மேம்பாலங்களில் பஸ்கள் பயணிக்கத் துவங்கியுள்ளதால் லட்சுமியாபுரம், நத்தம்பட்டி, மூவரை வென்றான், வடுகபட்டி, அம்மாபட்டி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து ராஜபாளையம் வரை 71.6 கிலோ மீட்டர் தூரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் பல்வேறு இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கும் பணி இரவு, பகலாக நடக்கிறது.
இந்நிலையில் நத்தம்பட்டி, லட்சுமியாபுரம் பகுதிகளில் உள்ள மேம்பாலங்கள் முடிவடைந்து தற்போது வாகன போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதனால் மதுரை, தேனி, விருதுநகர் பகுதிகளில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் வரும் பஸ்கள் மேம்பாலத்தில் பயணிக்கிறது. இதில் அம்மாபட்டி அருகே மேம்பாலம் அமைக்கப்படாததால் வடுகப்பட்டி, அம்மாபட்டி, மூவரை வென்றான் மக்கள் நத்தம் பட்டி வந்து தான் பஸ் ஏற வேண்டிய நிலை உள்ளது.
இந்நிலையில் இந்த வழித்தடத்தில் இயங்கும் அனைத்து பஸ்களுமே மேம்பாலம் வழியாக செல்வதால் கிருஷ்ணன் கோவிலில் இருந்து அழகாபுரி வரை உள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள், மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
எனவே, அனைத்து பஸ்களும் மேம்பாலத்தின் கீழ் உள்ள சர்வீஸ் ரோடு வழியாக செல்வதை போக்குவரத்து கழகம் உறுதி செய்ய வேண்டும். இதற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாகும்.