/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவி., யில் அரசு டாக்டருக்கு கத்திக்குத்து
/
ஸ்ரீவி., யில் அரசு டாக்டருக்கு கத்திக்குத்து
ADDED : ஜூலை 08, 2025 05:05 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்: - ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு மருத்துவமனை டாக்டர் ரமேஷ் பாபு 50 என்பவர் நேற்றிரவு தனது கிளினிக்கில் இருந்து வெளியே வந்தபோது கத்தியால் குத்தப்பட்டார்.
ஸ்ரீவில்லிபுத்துார் அரசு மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை டாக்டராக பணியாற்றுபவர் ரமேஷ் பாபு 50, இவர் சின்ன கடை பஜாரில் தனியாக கிளினிக் வைத்துள்ளார்.
நேற்று இரவு 9:00 மணிக்கு கிளினிக்கை முடித்துவிட்டு வெளியில் வரும்போது, மர்ம நபர் ஒருவர் டாக்டரை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடினார். இதில் டாக்டருக்கு வயிறு, தொடை உட்பட 6 இடங்களில் காயம் ஏற்பட்டது.
காயத்துடன் ரோட்டில் விழுந்த டாக்டர் ரமேஷ் பாபுவை அக்கம் பக்கத்தினர் மற்றும் போலீசார் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். டாக்டரரை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிய ராஜபாளையத்தைச் சேர்ந்த பாண்டி கணேசன் 31 என்பவரை போலீசார் பிடித்து காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.