
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை சவுடாம்பிகா பாலிடெக்னிக் கல்லுாரியில் 2024 ஏப்ரலில் டிப்ளமோ முடித்த மாணவர்களுக்கு பட்டமளிப்பு நேற்று நடந்தது.
கல்லுாரி தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். பொருளாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். குத்து விளக்கு ஏற்றி விழா துவங்கியது. செயலாளர் வெள்ளைச்சாமி வரவேற்றார்.
ஆவடி மாநகராட்சி கமிஷனர் கந்தசாமி பேசி, நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பட்டய சான்றிதழ் வழங்கினார். பட்டமளிப்பு அறிக்கையை முதல்வர் கந்தவேல்சாமி சமர்ப்பித்தார். ஏற்பாடுகளை அனைத்து துறை தலைவர்கள், ஆசியர்கள், மேலாளர், அலுவலர்கள் செய்தனர்.