/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கிராபிக் கோண்டம் டாட்ஸ் துகள்கள் ஆராய்ச்சி கலசலிங்கம் பல்கலை மாணவர்கள் சாதனை

ADDED : பிப் 17, 2024 04:29 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்: கிருஷ்ணன் கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழக மாணவர்கள் புதிய கிராபிக் கோண்டம் டாட்ஸ் துகள்கள் ஆராய்ச்சியில் சாதனை படைத்துள்ளனர்.
இயற்பியல் ஆராய்ச்சி துறை பேராசிரியர் தெய்வ சாந்தி வழிகாட்டுதலில் மாணவிகள் ஐஸ்வர்யா, சந்தியா ஆகியோர் கிராபிக் கோண்டம் நானோ ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். இதில் 1 முதல் 5 நானோ மீட்டர் அளவில் டாட்ஸ் துகளை உண்டாக்கி காண்பித்து, அதில் அல்ட்ரா வயலட் ஒளியைப் பாய்ச்சி அதிலிருந்து மஞ்சள் ஒளி வெளிப்படுவதை செய்து காண்பித்தனர்.
பேராசிரியர் தெய்வ சாந்தி கூறுகையில், இந்த நானோ துகள்களை எல்.இ.டி, சென்சார் உற்பத்தி, மெடிக்கல் இமேஜிங் போன்ற பல துறைகளில் பயன்படுத்தலாம். தற்போது பயன்படுத்தும் கேட்மியம் விஷ வாயுவை வெளிப்படுத்தும். ஆனால், புதிய கார்பன் நானோ துகளால் எவ்வித பாதிப்பும் இல்லை. இதனை குறைந்த விலையில் உற்பத்தி செய்ய முடியும் என்றார்.
பேராசிரியர் தெய்வ சாந்தி மற்றும் மாணவர்களை, பல்கலைக்கழக துணைதலைவர் சசி ஆனந்த், துணைவேந்தர் நாராயணன், பதிவாளர் வாசுதேவன் பாராட்டினர்.