ADDED : நவ 02, 2026 05:44 PM

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சர்ச்களில் கல்லறை திருநாள் சிறப்பு வழிபாடு, திருப்பலி நடந்தது.
இறந்தவர்களை நினைவுப்படுத்தும் கல்லறை திருநாள் நேற்று அனுசரிக்கப்பட்டது.
விருதுநகர் இஞ்ஞாசியார் சர்ச், பாண்டியன் நகர் சவேரியார் சர்ச், நிறைவாழ்வு நகர் ஜெபமாலை அன்னை சர்ச், ஆர்.ஆர்., நகர் வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை சர்ச், கன்னிசேரிபுதூர் சவேரியார் சர்ச்களில் கல்லறை திருநாள் திருப்பலி, மறையுரை நடந்தது.
இதில் பாதிரியார்கள் அருள் ராயன், நித்தின் பிரபு, லாரன்ஸ், மோட்சம் ரிச்சர்ட், அந்தோணிச்சாமி, பீட்டர் ராய், அருள்தாஸ், தலைமையில் கல்லறை திருநாள் திருப்பலி, மறையுரை நடந்தது.
மேலும் சர்ச் பகுதியில் உள்ள கல்லறை தோட்டங்களில் பாதிரியார்கள் கல்லறைகளை மந்திரித்து வழிபாடு நடத்தினார்கள். அங்கிருந்தவர்கள் தங்கள் முன்னோர்களின் கல்லறைகளில் பூமாலை அணிவித்து, அவர்களின் ஆன்மா மோட்சமடைய மோட்ச விளக்கு ஏற்றியும் மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தனர்.
