நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்தூர் : - ஸ்ரீவில்லிபுத்தூரில் குறவர் உறவின் முறை சார்பில் வேடுவகுல அரசர்களான வில்லுகண்டனுக்கு குருபூஜை நடந்தது. இதனை முன்னிட்டு நல்ல குற்றாலம் தெருவில் இருந்து துவங்கிய முளைப்பாரி ஊர்வலத்தை குறிஞ்சியர் முன்னேற்ற பேரவை தலைவர் சந்திரசேகரன் துவக்கி வைத்தார்.
தமிழக அரசின் சார்பில் வில்லி, கண்டனுக்கு மணிமண்டபம் அமைத்து தரவேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. விழா ஏற்பாடுகளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.