/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கைத்தறி, பெடல் தறி நெசவாளர்கள் கூலி உயர்வு ஜூலை முதல் அமுல் 6400க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் பயன்

ADDED : ஜூலை 22, 2025 03:23 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 4400 நெசவாளர்கள், அதைச் சார்ந்த 2000 ஆயிரம் உபதொழில் புரிவோர் என மொத்தம் 6400க்கும் மேற்பட்ட நெசவாளர்களுக்கு ஜூலை முதல் கூலி உயர்வு அமலுக்கு வந்துள்ளது.
தமிழக சட்டசபையில் 2025 --2026ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பெடல் தறி, விசைத்தறி வேட்டி, சேலை ரகங்களுக்கு நெசவுக்கூலி உயர்த்தி வழங்கப்படும்.
விசைத்தறி வேட்டி, சேலை ரகங்களுக்கு நெசவுக்கு முந்தைய கூலியை உயர்த்தி வழங்குதல், கைத்தறி, பெடல் தறி சேலை ரக உற்பத்திக்கு தேவையான நுாலுக்கான சாயக்கூலியை உயர்த்தி வழங்குதல் என அறிவிக்கப்பட்டு அரசாணையும் வெளியிடப்பட்டது.
இதையடுத்து இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தில் பெடல் தறி சேலைகளுக்கான நெசவுக்கூலி ரூ. 69.79ல் இருந்து ரூ. 75.95 ஆக உயர்த்தி வழங்கவும், கைத்தறி, பெடல் தறி சேலைகளுக்கான நெசவுக்கு முந்தைய கூலி ரூ. 26.67ல் இருந்து ரூ. 28 ஆக உயர்த்தி வழங்கப்படவுள்ளது.
வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தில் கைத்தறி, பெடல் தறி சேலைகள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் 40எஸ் கிரே சிட்டா நுால் சாயமிடும் கட்டணம் ஒரு கட்டுக்கு நுாலுக்கான சாயக்கூலி ரூ. 130ல் இருந்து ரூ. 140 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்த்தப்பட்ட கூலி உயர்வு அனைத்தும் ஜூலை முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனால் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 4400 நெசவாளர்கள், அதைச் சார்ந்த 2000 உபதொழில் புரிவோர் என மொத்தம் 6400க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் பயன் அடைவார்கள். கடந்த 10 ஆண்டுகளாக உயர்த்தப்படாத கூலி உயர்வு தற்போது சட்டசபை மானியக் கோரிக்கையில் அறிவித்தப்படி உயர்த்தப்பட்டு வழங்கப்படுகிறது.