
சிவகாசி : சிவகாசி சிவன் கோயில் முன்பு விசுவ ஹிந்து பரிஷத் பஜ்ரங்தள் சிவகாசி கிளை சார்பில் 14 வது ஆண்டு அனுமன் ஜெயந்தி உற்சவ விழா, பஜனை மேளா நிகழ்ச்சி நடந்தது.
சுவாமிகள் ராமர், சீதா, அனுமனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து ராம ஆஞ்சநேயர், ராமர், சீதா ரத வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
*திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் கோயிலில் அலங்கார திருமஞ்ஜனம் அகண்ட நாம பஜனை நடந்தது. பால்குடம் எடுக்கப்பட்டது.
*சிவகாசி ஈஞ்சார் விலக்கில் அனுமன் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. நாரணாபுரம் சக்கரத்தாழ்வார் கோயிலில் சுவாமிக்கு காய்கறி, பழங்கள் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. சிவகாசி பஸ்டாண்ட் துர்க்கை பரமேஸ்வரி அம்மன் கோயிலில் சீனிவாச பெருமாள் அலங்காரம் பூஜைகள் நடந்தது. பேச்சியம்மன் கோயிலில் பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.