/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பால்பண்ணையில் வைக்கோலில் தீ விபத்து
/
பால்பண்ணையில் வைக்கோலில் தீ விபத்து
ADDED : ஆக 20, 2025 07:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகர் டி.டி.கே., ரோட்டில் மேலத்தெருவைச் சேர்ந்தவர் மேகநாதன் 64. இவர் வீட்டின் அருகே பால்பண்ணை, மாடுகளுக்கு தேவையான வைக்கோலை தகர செட்டில் வைத்திருந்தார். கவுசிகா நதியை துார்வாரும் பணியின் போது காய்ந்த கிளைகள், குப்பையை ரோடு ஓரத்தில் போட்டு எரித்து வருகின்றனர்.
நேற்று மதியம் 3:00 மணிக்கு ரோடு ஓரத்தில் எரித்த போது அதில் இருந்து தீப்பொறி பால்பண்ணையில் இருந்த வைக்கோல் மீது விழுந்து தீவிபத்து ஏற்பட்டது. தீயணைப்புத்துறையினர் வைக்கோலில் பற்றிய தீயை அணைத்தனர். இந்த விபத்தில் வைக்கோல் முழுவதும் எரிந்து தகர செட் பாழானது. மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.