/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாத்துாரில் எரியாத உயர் மின்கோபுர விளக்குகள்
/
சாத்துாரில் எரியாத உயர் மின்கோபுர விளக்குகள்
ADDED : ஏப் 05, 2025 06:12 AM
சாத்துார்: சாத்துார் மெயின்ரோடு பங்காளத்தெரு பகுதியில் எரியாத உயர்மின் கோபுர விளக்குகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
சாத்துார் மெயின் ரோடு காமராஜர் சிலை அருகே உயர் மின் கோபுர விளக்கு உள்ளது. இந்த உயர்மின் கோபுர விளக்கு வெளிச்சம் காரணமாக எத்தல் ஹார்விரோடு மெயின்ரோடு பகுதிகள் வெளிச்சம் பெற்று வந்தன.
கடந்த சில வாரங்களாக இந்த உயர் மின் கோபுர விளக்குகள் எரியவில்லை. இதனால் காமராஜர் சிலை பகுதியில் எத்தல் ஹார்வி ரோடு பகுதியும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
இரண்டு ரோடுகள் சந்திக்கும் இடத்தில் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்த நிலையில் இரவு நேரத்தில் சாலையை கடப்பவர்கள் மீது வாகனங்கள் மோதி அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன.
மேலும் பங்களா தெருவில் நுாலகம் அமைந்துள்ள பகுதியில் உயர்மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த உயர்மின் கோபுர விளக்கும் கடந்த சில வாரங்களாக எரியவில்லை. இதனால் இரவு நேரத்தில் பங்களா தெரு முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
இந்த தெருவில் பொது நூலகம் மற்றும் வி.ஏ.ஓ. அலுவலகம் ஆர்.ஐ., அலுவலகங்கள், ஆர்.டி.ஓ குவாட்டர்சும் இந்த பகுதியில் உள்ளது. மக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில் விளக்குகள் எரியாததால் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
நகரில் பழுதான நிலையில் உள்ள உயர்மின் கோபுர விளக்குகளை விரைந்து சரி செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.