/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கவுரவ விரிவுரையாளர்கள் வகுப்பு புறக்கணிப்பு
/
கவுரவ விரிவுரையாளர்கள் வகுப்பு புறக்கணிப்பு
ADDED : பிப் 04, 2025 04:56 AM

சிவகாசி: தமிழக அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள் அனைத்து சங்கம் சார்பில் சிவகாசி அரசு கலை, அறிவியல் கல்லுாரியில் குறைந்த பட்ச ஊதியம் வழங்கக்கோரி உள்ளிருப்பு போராட்டம் நடந்தது.
பேராசிரியர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். பேராசிரியர் கணேசன் முன்னிலை வகித்தார். பல்கலை மானிய குழுவின் பரிந்துரை, நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் கல்லுாரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.57,700 வழங்க வேண்டும் உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தை நேற்று தொடங்கினர்.
இதில் சிவகாசி அரசு கல்லுாரியில் பணிபுரியும் 37 கவுரவ விரிவுரையாளர்கள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.