ADDED : ஏப் 07, 2025 07:14 AM

ராஜபாளையம் : ராஜபாளையத்தில் புதுப்பிக்கப்பட்ட மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை திறப்பு விழா நடந்தது.
இதயவள நிபுணரும், மருத்துவமனை இயக்குனர் டாக்டர் கோபால முருகன் வரவேற்றார். மருத்துவமனையை ராம்கோ குரூப் சேர்மன் பி.ஆர். வெங்கட்ராம ராஜா ரிப்பன் வெட்டி துவக்கினார். முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், சித்ரா மருத்துவமனை மேலாண்மை இயக்குனர் டாக்டர் சுரேஷ் பாபு, ராஜபாளையம் எம்.எல்.ஏ., தங்கபாண்டியன், நகராட்சி தலைவர் பவித்ரா, அடையார் ஆனந்த பவன் மேலாண்மை இயக்குனர் ஸ்ரீனிவாச ராஜா, நியூ பெர்க், ட்ரிவிட்ரான் நிறுவன தலைவர் வேலு, கிரி இன்டர் லாஜிஸ்டிக் தலைவர் சேவியர் பிரிட்டோ, பிரீமியர் என்டர்பிரைசஸ் ராஜேந்திர மணி, முன்னாள் அருப்புக்கோட்டை நகராட்சி தலைவர் சிவப்பிரகாசம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இம்மருத்துவமனை 24 மணி நேரமும் இதய கோளாறு, பக்கவாதம், விபத்து சம்பந்தப்பட்ட அவசர சிகிச்சைகளை முழு நேரமும் வழங்கும். சிறப்பு நிபுணர்கள் கொண்ட மருத்துவ குழுவினர் காந்த் லேப், சி.டி ஸ்கேன், நவீன சிகிச்சை உபகரணங்கள் மூலம் பாதிப்புகளை உடனடியாக கண்டறியும் சிகிச்சை வழங்கப்படுகிறது. இதய சிகிச்சைகள், எளிய ஆஞ்சியோ பிளாஸ்டி முதல் சிக்கலான இதய அறுவை சிகிச்சைகள் வரை மருத்துவ சேவைகள் உள்ளன என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

