/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கள்ளக்காதலை கண்டித்த கணவர் கொலை மனைவி, டிரைவருக்கு ஆயுள் தண்டனை
/
கள்ளக்காதலை கண்டித்த கணவர் கொலை மனைவி, டிரைவருக்கு ஆயுள் தண்டனை
கள்ளக்காதலை கண்டித்த கணவர் கொலை மனைவி, டிரைவருக்கு ஆயுள் தண்டனை
கள்ளக்காதலை கண்டித்த கணவர் கொலை மனைவி, டிரைவருக்கு ஆயுள் தண்டனை
ADDED : அக் 29, 2025 02:45 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கள்ளக்காதலை கண்டித்த கணவர் செல்வகணேசனை 41, கொலை செய்த அவரது மனைவி சுமதி 36, பட்டாசு ஆலை பஸ் டிரைவர் ராமச்சந்திரன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்துார் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
வத்திராயிருப்பு கிழவன் கோயில் செல்வகணேசன். இவரது மனைவி சுமதி. சிவகாசி பட்டாசு ஆலை தொழிலாளி. தினமும் பட்டாசு ஆலை பஸ்சில் சிவகாசி சென்று வந்த நிலையில் டிரைவர் ராமசாமியாபுரத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் 29, என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனை கணவர் கண்டித்துள்ளார். 2021 ஜூலை 18 இரவு வீட்டிலிருந்த செல்வகணேசனை ராமச்சந்திரனும், அவரது நண்பர் வேல்முருகனும் அரிவாளால் வெட்டியும், கத்தியால் குத்தியும் கொலை செய்தனர். இதில் சுமதிக்கும் தொடர்பு இருந்தது விசாரணையில் தெரிந்தது. மூவரையும் கூமாபட்டி போலீசார் கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்துார் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. ராமச்சந்திரன், சுமதிக்கு ஆயுள் தண்டனை விதித்தும், வேல்முருகனை விடுதலை செய்தும் நீதிபதி ஜெயக்குமார் உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் திருமலையப்பன் ஆஜரானார்.

