ADDED : ஆக 23, 2025 11:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: ராமச்சந்திரராஜா, சுரேஷ்ராஜா, பீமாராஜா ஆகியோர் ராஜபாளையம் வட்டார மக்கள் சார்பில் கலெக்டர் சுகபுத்ராவிடம் அளித்த மனு: 2024ல் புதிய கட்டடம் முதல்வர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது.
இதில் ஒவ்வொரு தளங்களிலும் காமராஜர், சங்கரலிங்கனார் உள்ளிட்டோரின் மார்பளவு சிலையும், உருவப்படமும் வைக்கப்பட்டுள்ளது. இதே போல் இவ்வளாகத்தில் தியாகி பி.எஸ்.குமாரசுவாமிராஜாவின் திருவுருவப்படமும், மார்பளவு சிலையும் அமைக்க வேண்டும். பழைய கலெக்டர் அலுவலகத்தில் தியாகிகள் திருவுருவ படத்திலும் குமாரசுவாமி ராஜா படம் வைக்க வேண்டும். முன்னாள் முதல்வரான இவர் சுதந்திர போராட்டங்களில் பங்கெடுத்துள்ளார். இவரது நினைவை போற்றும் வகையில் கோரிக்கையை ஏற்க வேண்டும் என்றனர்.