/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாத்துாரில் வசியப்படுத்தி நுாதன முறையில் பணம் திருட்டு
/
சாத்துாரில் வசியப்படுத்தி நுாதன முறையில் பணம் திருட்டு
சாத்துாரில் வசியப்படுத்தி நுாதன முறையில் பணம் திருட்டு
சாத்துாரில் வசியப்படுத்தி நுாதன முறையில் பணம் திருட்டு
ADDED : ஆக 25, 2025 01:19 AM
சாத்துார்: விருதுநகர் மாவட்டம் சாத்துார் அருகே நுாதன முறையில் சிறுமி நெற்றியில் விபூதி பூசி வசியப்படுத்தி அவரை வைத்தே வீட்டில் இருந்த பணத்தை திருடிச் சென்ற மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஏழாயிரம் பண்ணை அருகே கோட்டைப்பட்டியை சேர்ந்தவர் முருகன் 48. கோயம்புத்துாரில் ஆஸ்பெட்டாஸ் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இவரது மூத்த மகனும் மனைவியும் பட்டாசு ஆலையில் பணிபுரிந்து வருகின்றனர். பிளஸ் 2 படிக்கும் இவரது மகள் ஆக.,12 மாலை வீட்டில் துணி துவைத்துக் கொண்டிருந்தார்.
அப்போது அந்தத் தெருவில் மஞ்சள் வேட்டி, வெள்ளை சட்டை அணிந்து வந்த மூன்று பேர் வீடு வீடாக பிச்சை கேட்டனர். சிறுமியிடம் பிச்சை கேட்டபோது சிறுமி வீட்டிலிருந்து 11 ரூபாய் எடுத்துக் கொடுத்துள்ளார்.
அப்போது மூன்று பேரில் ஒருவர் சிறுமியின் நெற்றியில் விபூதி பூசி வீட்டில் உள்ள பணத்தை எடுத்து வா என்று கூறியுள்ளார். சிறுமியும் மந்திர சொல்லுக்கு கட்டுப்பட்டது போல வீட்டிற்குள் சென்று பீரோவில் மஞ்சள் பையில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 32 ஆயிரம் எடுத்து வந்து விபூதி பூசியவரிடம் கொடுத்துள்ளார்.
உடனடியாக மூவரும் தப்பி சென்றனர். மயக்கம் தெளிந்த சிறுமி வீட்டிற்கு வந்த தாய், அண்ணனிடம் தான் பணத்தை கொடுத்து ஏமாந்ததை தெரிவித்தார்.
சிறுமிக்கு நகை வாங்குவதற்காக சிறுக சிறுக சேர்த்து வைத்திருந்த பணத்தை நுாதன முறையில் திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஏழாயிரம் பண்ணை போலீசார் விசாரிக்கின்றனர்.