/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிலைகள், கொடி மரங்கள் மாயம்; இணை ஆணையர் விசாரணை
/
சிலைகள், கொடி மரங்கள் மாயம்; இணை ஆணையர் விசாரணை
ADDED : பிப் 06, 2024 12:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் யானை சிலைகள், பழைய கொடி மரங்கள் மாயமான சம்பவம் குறித்து அறநிலையத்துறை இணை ஆணையர் செல்லத்துரை கோயிலில் நேற்று விசாரணை நடத்தினார்.
கோயில் செயல் அலுவலர் முத்துராஜா மதுரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் கொடுத்த புகாரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நேற்று மதியம் 12:00 மணிக்கு கோயிலுக்கு வந்த அறநிலையத்துறை உதவி ஆணையர் செலத்துரை, கோயில் செயல் அலுவலர் முத்துராஜா மற்றும் அலுவலர்களிடம் சம்பவம் குறித்து விசாரித்தார்.