/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தி.மு.க., ஒரு முறை வென்றால் மறுமுறை தோல்வி நிச்சயம்
/
தி.மு.க., ஒரு முறை வென்றால் மறுமுறை தோல்வி நிச்சயம்
தி.மு.க., ஒரு முறை வென்றால் மறுமுறை தோல்வி நிச்சயம்
தி.மு.க., ஒரு முறை வென்றால் மறுமுறை தோல்வி நிச்சயம்
ADDED : அக் 11, 2024 04:46 AM
அருப்புக்கோட்டை: தி.மு.க., தேர்தலில் ஒரு முறை வென்றால் மறுமுறை கண்டிப்பாக தோல்வியை தழுவும் என, அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் பேசினார்.
அருப்புக்கோட்டையில் அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. நகர செயலர் சோலை சேதுபதி தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், பொதுக்குழு உறுப்பினர் வீரசுப்பிரமணி, முன்னாள் நகரச் செயலாளர் சக்திவேல் பாண்டியன், அவை தலைவர் வீரசுப்பிரமணியன், மாவட்டத் துணைச் செயலாளர் ராமர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர் வைகை செல்வன், முன்னாள் எம்.எல்.ஏ., ராஜவர்மன், மகளிர் அணி இணைச் செயலாளர் கீர்த்திகா பேசினர்.
முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன் கூறியதாவது: 2026 சட்டசபை தேர்தலில் அருப்புக்கோட்டை, திருச்சுழி, சாத்தூர் ஆகிய 3 தொகுதிகளில் அ.தி.மு.க., வெற்றி பெறும். அ.தி.மு.க., பெரிய இயக்கம். எங்களுடன் இணையாத கூட்டணி கட்சிகளே இல்லை. தி.மு.க., ஆட்சி மக்கள் விரோத ஆட்சி. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அமைச்சர்கள் தங்கள் குடும்பத்தை வளப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
தங்கள் உற்றார், உறவினர்களுக்கு பதவிகளை கொடுக்கிறார்கள், குடும்ப ஆட்சி தலைவரிடமிருந்து தொண்டர்கள் வரை நடந்து வருகிறது. தி.மு.க., வில் அயராது பாடுபட்ட பெருந்தலைவர்களுக்கு கிடைக்காத வாய்ப்பு உதயநிதிக்கு கிடைத்திருப்பதை கண்டு தி.மு.க., வில் கொதித்து போய் இருக்கிறார்கள். மனம் இடிந்து போய் இருக்கிறார்கள். இது தேர்தல் நேரத்தில் வெளிப்படும்.
அதோடு மட்டுமல்லாமல் பொதுமக்களும் மிகுந்த வேதனையுடன் உள்ளார்கள். தி.மு.க., ஒரு தேர்தலில் வெற்றி பெற்றால், அடுத்த முறை தோல்வியை தழுவுவது நிச்சயம். இது வரலாறு, என்று பேசினார்.
நகர இலக்கிய அணி செயலாளர் சீனிவாசகன் நன்றி கூறினார்.

