sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மனதை ஆளும் புத்தகங்களை வாசித்தால் உலகை ஆளலாம்: விருதுநகர் புத்தகத் திருவிழாவில் குவியும் வாசகர்கள்

/

மனதை ஆளும் புத்தகங்களை வாசித்தால் உலகை ஆளலாம்: விருதுநகர் புத்தகத் திருவிழாவில் குவியும் வாசகர்கள்

மனதை ஆளும் புத்தகங்களை வாசித்தால் உலகை ஆளலாம்: விருதுநகர் புத்தகத் திருவிழாவில் குவியும் வாசகர்கள்

மனதை ஆளும் புத்தகங்களை வாசித்தால் உலகை ஆளலாம்: விருதுநகர் புத்தகத் திருவிழாவில் குவியும் வாசகர்கள்


ADDED : அக் 01, 2024 11:53 PM

Google News

ADDED : அக் 01, 2024 11:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்ட போது ஒரு நுாலகம் கட்டுவேன் என்று பதில் அளித்தார் காந்தி. மனிதனின் ஆகச்சிறந்த கண்டு பிடிப்பு எது என கேட்ட போது சற்றும் யோசிக்காமல் புத்தகம் என பதிலளித்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். வாழ்வை தெரிந்து கொள்ளவும், ஒவ்வொரு வயதிலும் வரும் தடைகளை புரிந்து கொள்ளவும் நாம் அந்தந்த வயதுகளில் படிக்கும் புத்தகங்கள் பெரும் உதவியாக இருக்கும்.

விருதுநகர் மதுரை ரோடு கே.வி.எஸ்., பள்ளி மைதானத்தில் புத்தகங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. அக். 7வரை தினமும் காலை 11:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை நடக்கிறது. இலக்கியம், வரலாறு, ஆன்மிகம், அரசியல், மருத்துவம், பொது அறிவு, சமையல், குழந்தைகளுக்கான புத்தகங்கள், போட்டி தேர்வு புத்தகங்கள் அதிகம் உள்ளன.

இங்கு வாங்கும் அனைத்து புத்தகங்களுக்கும் 10 சதவீத தள்ளுபடி உண்டு. அனுமதி இலவசம். மாலை 6:00 மணிக்கு மேல் சிறப்பு பேச்சாளர்கள் பேசுகின்றனர். பபாசி, மாவட்ட நிர்வாகம், பொது நுாலகத்துறை இணைந்து ஏற்பாடுகளை செய்கிறது.

கவனம் ஈர்த்த புத்தகங்கள் சில...

ஸ்ரீகாஞ்சிப்பெரியவாளின் கருணை அதிசயங்கள்

நம்பினார் கைவிடப்படார் என்ற வாக்கிற்கிணங்க நடமாடும் தெய்வமாக விளங்கிய மகா பெரியவா நடத்திய அற்புதங்கள் சொல்லிலோ, எழுத்திலோ அடங்கா. அவற்றில் சிலவற்றின் தொகுப்பே இப்புத்தகம். இப்படியும் நடக்குமா என ஆச்சரியப்படும் வண்ணம் இதில் சம்பவங்கள் உள்ளன.

ஆசிரியர்: கவியோகி வேதம்

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

விலை: ரூ.130

கிழவனும் கடலும்

பரிசு பெற்ற எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் ஆகப் புகழ்பெற்ற நாவல் இது. ஒரு மனிதனுக்கும், மீனுக்கும் இடையே நடக்கும் உயிர்ப் போராட்டத்தை காவிய சுவையுடன் சித்தரிக்கிறது இந்நுால். அழகிய ஓவியங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

ஆசிரியர் எர்னெஸ்ட் ஹெமிங்வே

வெளியீடு: காலச்சுவடு

விலை: ரூ.95

உங்களில் ஒருவன்

தமிழகம் அடைந்திருக்க வேண்டிய முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும், ஊழலும், திறமையின்மையும் தடுத்து விட்டன. மாநிலத்தையும், மக்களையும் முன்னேற்றக்கூடிய நீண்டகால திட்டங்கள் தீட்டப்படவில்லை. நாட்டுக்காக செயல்பட வேண்டிய தமிழக அரசியல், ஓட்டுக்காகவும், நோட்டுக்காகவுமே செயல்பட்டது. இந்த அவலங்களை எடுத்துக்கூறி பிரதமர் மோடி செய்து வரும் நன்மைகளை உரக்க சொல்ல பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் என் மண், என் மக்கள் நடைபயணம் செய்தார். அப்பயண அனுபவங்களை அவர் கட்டுரைகளாக எழுத அது தினமலர் நாளிதழில் தினமும் வெளிவந்தன. அதன் தொகுப்பே இந்நுால்.

ஆசிரியர்: கே.அண்ணாமலை

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிட்.,

விலை: ரூ.600

பணம்சார் உளவியல்

இந்நுாலின் ஆசிரியர், பல்வேறு மக்கள், எப்படியெல்லாம் வித்தியாசமான முறைகளில் பணம் குறித்து யோசிக்கின்றனர் என்பதை, 19 கதைகளின் மூலம் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். பணத்தைச் சிறப்பாகக் கையாள்வது என்பது, நீங்கள் எவ்வளவு அறிந்திருக்கிறீர்கள் என்பதை மட்டுமே பொறுத்து அமைந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அது நீங்கள் எப்படி நடந்து கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது என்கிறார்.

ஆசிரியர்: மார்கன் ஹவுசல். தமிழில்: சந்தர் சுப்பிரமணியன்

வெளியீடு: ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ்

விலை: ரூ.325

ஆழ்மனதின் அற்புத சக்தி

காலத்தால் கவுரவிக்கப்பட்ட ஆன்மிக ஞானத்தை, அறிவுபூர்வ விஞ்ஞான ஆராய்ச்சியுடன் சேர்த்து உங்கள் ஆழ்மனது எப்படி உங்கள் ஒவ்வொரு செயலையும் இயக்குகிறதோ, அதை புரிந்து கொண்டு அதன் நம்ப முடியாத சக்தியை கட்டுப்படுத்தக் கற்றுக் கொள்வதன் மூலம் எப்படி உங்கள் அன்றாட வாழ்வின் தரத்தை உயர்த்தலாம் என்பதை விளக்குகிறார் நுாலாசிரியர்.

ஆசிரியர் ஜோசப் மர்பி, தமிழில்: நாகலட்சுமி சண்முக சுந்தரம்

வெளயீடு: மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்

விலை: ரூ.134

புத்தகத்திருவிழாவில் தேடி வாங்கிய புத்தகங்கள் குறித்து வாசகர்கள் கூறியதாவது:

இதுதான் முதன்முறை


ஜனனி, விருதுநகர்: புத்தகத்திருவிழாவில் விதவிதமான புத்தகங்களை பார்க்க முடிந்தது. இது தான் முதன்முறையாக புத்தகத் திருவிழாவிற்கு வருவது. நிறைய புத்தகங்களை பார்த்து வைத்துள்ளேன். அடுத்தடுத்து வாங்குவேன். கல்லுாரிக்கு சென்ற பின்னும் தொடர்ந்து புத்தகங்களை படிக்க வேண்டும். புத்தகம் நம் ஆளுமையை உயர்த்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

தனித்துவம் மிகுந்த விழா


மணிமேகலை, காரியாபட்டி: குழந்தைகளுக்கு தேவையான புத்தகங்களை வாங்க வந்துள்ளேன். ஆல்பபாட்டிக்கல் எழுத்து உருவங்களை வாங்க வந்துள்ளேன். இந்தாண்டு மரமும், மரபும் என தனித்துவமான வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பசுமையின் முக்கியத்துவதை குறிக்கும் வகையில் வனத்துறை அரங்குகள் அருமையாக இருந்தன.

பயனுள்ள அரங்குகள்


பிரேம்குமார், விருதுநகர்: சுயமுன்னேற்ற புத்தகங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். சீக்ரெட், இக்கிகய் என பல்வேறு புத்தகங்களை பார்த்து வைத்துள்ளேன். புத்தகத் திருவிழாவிற்கு மாணவர்கள் நிறைய பேர் வருகின்றனர். இது அவர்களின் எதிர்கால கல்வியை வளப்படுத்தும். அத்தனை அரங்குகளும் பயனுள்ளதாக உள்ளது.

ஊன்றுகோலாக புத்தகங்கள்


கற்பகவள்ளி, விருதுநகர்: எனக்கு கதைப்புத்தகங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். பல்வேறு எழுத்தாளர்களின் கதைப்புத்தகங்கள் வாசிப்பது எனக்கு பொழுது போக்கு. தேவையான புத்தகங்களை வாங்க வந்துள்ளேன். தொடர்ந்து புத்தகம் வாசித்தால் அடுத்த தலைமுறை நம்மை விட இன்னும் செம்மையான ஒன்றாக மாறிவிடும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. இதற்கு ஊன்று கோலாக இருப்பவை புத்தகத் திருவிழாக்கள் தான்.

பாக்ஸ் மேட்டர்/

புத்தகங்கள் இலவசம்புத்தகத்திருவிழா அரங்கு 88ல் தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் அரங்கு இடம் பெற்றுள்ளது. இங்கு தினமலர் ஆண்டு சந்தா ரூ.1999 ரொக்கம் அல்லது ஆன்லைன் அல்லது காசோலை மூலம் செலுத்தி புத்தகங்களை இலவசமாக பெற்று கொள்ளலாம். அங்கு இடம் பெற்றுள்ள புத்தகங்களுக்கு 10 சதவீத தள்ளுபடி உண்டு








      Dinamalar
      Follow us