/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தேர்தல் விதிமுறை அமல்; பணிகள் சுணக்கம்
/
தேர்தல் விதிமுறை அமல்; பணிகள் சுணக்கம்
ADDED : மார் 19, 2024 05:37 AM
விருதுநகர் : விருதுநகரில் பல்வேறு பகுதிகளில் அரசு பேனர்கள், திட்டங்கள் மறைக்கப்படாமல் உள்ளன. தேர்தல் விதிமுறை அமலாகி 48 மணி நேரம் ஆகியும் மூடாமல் உள்ளனர்.
விருதுநகரின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் கூடும் இடங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. கொடி, சிலைகள் மூடப்பட்டு வருகின்றன. தேர்தல் தேதியானது மார்ச் 16ல் மதியம் 3:00 மணிக்கு அறிவிக்கப்பட்டது. அது முதல் தேர்தல் நடத்தை விதி அமலானது. 48 மணி நேரத்திற்குள் அரசியல் தலைவர்கள், கட்சிகளின் கொடிகள், சுவர் விளம்பரங்கள் ஆகியவை அகற்றப்பட வேண்டும். நேற்று மதியம் 3:00 மணியோடு 48 மணி நேரம் முடிந்தும் தேர்தல் விதிமுறையை விருதுநகர் அலுவலர்கள், அதிகாரிகள் நிறைவேற்றவில்லை.
நேற்று மாலை வரையிலும் எம்.ஜி.ஆர்., சிலை மூடப்படவில்லை. அங்கிருந்த கொடிகள் அகற்றப்படவில்லை. தமிழக அரசின் பிரதான திட்டங்களின் பேனர்களும் அகற்றப்படாமல் இருந்தன. பஸ் ஸ்டாண்டிலும் இதே நிலை தான். தாலுகா அதிகாரிகள், அலுவலர்கள் சுணக்கமாக செயல்பட்டதே இதற்கு காரணம். விரைந்து தேர்தல் விதியை அமல்படுத்த வேண்டும்.

