/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வன்னியம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் வீணாகி வரும் பறிமுதல் வாகனங்கள்
/
வன்னியம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் வீணாகி வரும் பறிமுதல் வாகனங்கள்
வன்னியம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் வீணாகி வரும் பறிமுதல் வாகனங்கள்
வன்னியம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் வீணாகி வரும் பறிமுதல் வாகனங்கள்
ADDED : ஜன 29, 2024 05:00 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்துார் காவல் துணை கோட்டத்தில் பல்வேறு விபத்துக்கள், குற்றச்சம்பவங்களில் பிடிபட்ட ஆட்டோ, டிராக்டர் மற்றும் கனரக வாகனங்கள் வன்னியம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் பின்புறம் நிறுத்தப்பட்டு மண்ணில் மக்கி பழுதடைந்து வருகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீஸ் ஸ்டேஷன் எல்லை பகுதிக்குள் நடந்த பல்வேறு விபத்துக்கள், மண் திருட்டு போன்ற சமூக விரோத செயல்களில் பிடிபட்ட வாகனங்கள் ஸ்டேஷன் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் டவுன் ஸ்டேஷனுக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டதால் அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் தற்போது வன்னியம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் பின்புறம் உள்ள காலி இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும், வன்னியம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் எல்லைப் பகுதியில் நடந்த குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட வாகனங்களும் பிடிக்கப்பட்டு அங்கு நிறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு பிடிபட்ட வாகனங்கள் பல ஆண்டுகளாக அங்கு நிறுத்தப்பட்டுள்ளதால் டயர்கள் பஞ்சராகி, எஞ்சின்கள் பழுதாகி, டிரைலர்கள் சேதமடைந்து வருகிறது. இது தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நடந்து வருவதால் சம்பந்தப்பட்டவர்களிடம் மீண்டும் வாகனங்களை ஒப்படைக்க முடியவில்லை. இதனால் பிடிபட்ட வாகனங்கள் திரும்பப் பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. அதனால் வாகனங்கள் பழுதடைந்து மீண்டும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
எனவே, பிடிப்பட்ட வாகனங்கள் மீதான வழக்குகளை விரைந்து முடித்து, நீதிமன்ற உத்தரவின்படி திரும்ப ஒப்படைப்பதோ அல்லது பறிமுதல் செய்யவோ ஸ்ரீவில்லிபுத்தூர் போலீஸ் நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன உரிமையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.