/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
துாய்மை இந்தியா திட்டத்தில் கழிப்பிடம் கட்டியும் இன்றும் திறந்தவெளியை நாடும் அவலம் தொடருது
/
துாய்மை இந்தியா திட்டத்தில் கழிப்பிடம் கட்டியும் இன்றும் திறந்தவெளியை நாடும் அவலம் தொடருது
துாய்மை இந்தியா திட்டத்தில் கழிப்பிடம் கட்டியும் இன்றும் திறந்தவெளியை நாடும் அவலம் தொடருது
துாய்மை இந்தியா திட்டத்தில் கழிப்பிடம் கட்டியும் இன்றும் திறந்தவெளியை நாடும் அவலம் தொடருது
ADDED : நவ 18, 2024 06:44 AM
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நகர், ஊரக பகுதிகளில் கழிப்பிட வசதிகள் ஏற்படுத்தப்பட்டும் அவை முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளதால் இன்றும் மக்கள் திறந்தவெளியை நாடும் அவலம் உள்ளது.
மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 5 நகராட்சிகள், 9 பேரூராட்சிகள், 450 ஊராட்சிகள் என உள்ளாட்சி அமைப்புகள் இயங்கி வருகின்றன. இவற்றில் மத்திய அரசின் துாய்மை இந்தியா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஊரக பகுதிகளில் ரூ.12 ஆயிரம் மானியத்தில் ஒன்றரை லட்சம் கழிப்பிடங்கள் வரை கட்டப்பட்டுள்ளன. இதே போல் நகர்ப்பகுதிகளான நகராட்சிகள், பேரூராட்சிகளிலும் ஆயிரக்கணக்கில் கழிப்பறைகள் கட்டப்பட்டன.
நகர்ப்பகுதிகளில் முறையாக கட்டப்பட்டாலும் ஊரக பகுதிகளில் பணிகள் சரியாக நடக்கவில்லை. இவை பல இடங்களில் சேதமடைந்தும், பராமரிப்பு இன்றியும் பெயரளவிலே காட்சி அளிக்கின்றன. ஊரக பகுதிகளில் புதர்மண்டியும், தேங்காய் மட்டைகள் போட்டு வைக்கும் அறையாகவும், கோழிகள் தங்கவும் பயன்பட்டு வருகின்றன. ஆனால் கழிப்பிடமாக பயன்படவே இல்லை.
வெறும் பெயருக்காக திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதால் போதிய தரம் இல்லை எனவும், ஊராட்சி நிர்வாகங்களின் சுகாதார வளாகங்களை நாடுகின்றனர். ஊராட்சியின் சுகாதார வளாகம் இல்லாத பகுதிகளில் கண்மாய் கரை தான் திறந்தவெளி கழிப்பிடங்களாக உள்ளன. இதனால் நோய், சுகாதார கேடு ஏற்படுகிறது. மத்திய அரசின் திட்டத்தை கண்காணிக்கும் மாவட்ட அலுவலர்கள் இங்கில்லாது வேறு மாவட்ட அலுவலகங்களில் இருப்பதால் கள ஆய்வு இல்லாத சூழல் உள்ளது.
ஊரக பகுதிகளில் வழக்கம் போல் நிறைவேற்றப்படும் சமுதாய கூடங்கள், ஊராட்சி சேவை மையங்கள் போல் இந்த கழிப்பறைகளின் நிலையும் உள்ளது. ரூ.12 ஆயிரம் மானியத்திற்கு என்பதால் பயனாளிகள் பலர் ஆசைப்பட்டாலும் கட்டுமான பணிகளில் போதிய உறுதித்தன்மை இல்லை. முன்னேற துடிக்கும் மாவட்டமாக உள்ள விருதுநகரில் திறந்த வெளி கழிப்பிடம் சுகாதார கேட்டிற்கு தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.