/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விருதுநகரில் மேல்நிலை தொட்டி குடிநீர்தனியார் வாகனங்களில் விற்பனை கண்டு கொள்ளாத அதிகாரிகளால் மக்கள் பாதிப்பு

ADDED : பிப் 15, 2024 04:47 AM
விருதுநகர்: விருதுநகர் நகராட்சி வார்டுகளில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியின் குடிநீர் தனியார் தண்ணீர் வாகனங்கள் மூலம் வீடுகளுக்கு குடத்திற்கு ரூ. 5 என விற்பனை செய்யப்படுகிறது.
விருதுநகர் நகராட்சியில் உள்ள 36 வார்டுகளுக்கும் மினரல் வாட்டர் பிளாண்ட் அமைக்கப்பட்டு செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. ஆனால் வாட்டர் பிளான்ட்களில் மோட்டார் பழுது ஏற்பட்டு பல பிளான்ட்கள் தொடர்ந்து செயல்படவில்லை. இதில் பல வார்டுகளுக்கு 15 நாளுக்கு ஒரு முறை குடிநீர் வருகிறது. இதனால் மக்கள் குடிநீருக்காக திண்டாடி வருகின்றனர்.
இதை பயன்படுத்தி சில கவுன்சிலர்கள் வார்டுகளில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டிகளில் இருந்து குடிநீரை எடுத்து வாகனங்களில் குடத்திற்கு ரூ. 5 என வீடுகளில் வினியோகம் செய்து வசூல் வேட்டையில் ஈடுபடுகின்றனர்.
தண்ணீரை எடுத்து தனியார் வாகனங்களில் விற்பனை செய்வது அதிகாரிகளுக்கு தெரிந்தும் தகுந்த நடவடிக்கை எடுக்காமல் தயக்கம் காட்டுகின்றனர்.
மினரல் வாட்டர் பிளான்ட்களை சரிசெய்து கொடுத்து விட்டால் வாகன குடிநீரை மக்கள் வாங்க மாட்டார்கள் என தெரிந்து பழுதுகளை செய்யாமல் கவுன்சிலர்கள் போக்கு காட்டுகின்றனர். எனவே நகராட்சி மேல்நிலை குடிநீர் தொட்டியில் இருந்து குடிநீரை எடுத்து தனியர் வாகனங்களில் விற்பனை செய்பவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.