/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பிளவக்கல் பெரியாறு அணையில் தனி நபர்கள் நடமாட்டம் அதிகரிப்பு
/
பிளவக்கல் பெரியாறு அணையில் தனி நபர்கள் நடமாட்டம் அதிகரிப்பு
பிளவக்கல் பெரியாறு அணையில் தனி நபர்கள் நடமாட்டம் அதிகரிப்பு
பிளவக்கல் பெரியாறு அணையில் தனி நபர்கள் நடமாட்டம் அதிகரிப்பு
ADDED : ஜன 09, 2024 12:44 AM
வத்திராயிருப்பு, : பிளவக்கல் பெரியாறு அணைக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சில தனி நபர்கள் காடுகள் வழியாக அணைப்பகுதிக்கு சென்று வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதனை தடுக்க போலீசாரும், பொதுப்பணித்துறையினரும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பதால் பிளவக்கல் பெரியாறு அணைக்கு பொதுமக்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வரும் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
மலையடிவாரத்தில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துவிட்டு மக்களை அனுமதிக்கலாம் என வனத்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால், அதற்குரிய எவ்வித ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் செய்யவில்லை. இதனால் விடுமுறை நாட்களில் அணைப்பகுதிக்கு சுற்றுலாவாக வரும் மக்கள் ஏமாற்றமடைகின்றனர்.
அணையின் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்தவர்களும், அரசுத்துறை அதிகாரிகளின் நண்பர்களும் அவ்வப்போது சென்று வருகின்றனர். மேலும் தனி நபர்கள் மலையடிவார காடுகள், பூங்கா வழியாக அணைப்பகுதிக்கு சென்று, தண்ணீர் வெளியேறும் பாதையில் நின்று அலைபேசி வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, அணைக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. மலையடிவார காடுகள் மூலம் அணை பகுதிக்கு செல்ல வாய்ப்புள்ளது. அதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.
அணைப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு இல்லாததால் இது போன்ற தனி நபர்கள் அத்துமீறி நுழைந்து வீடியோ எடுப்பதாக கூறப்படுகிறது. இதனை தடுக்க அணைப்பகுதியில் போலீஸ் கண்காணிப்பு அவசியமாகிறது.