/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அறிவியல் தொழில்நுட்பத் துறையில் இந்தியா அன்று 81வது இடம்; தற்போது 39வது இடம் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேச்சு

ADDED : ஆக 18, 2025 01:49 AM
சிவகாசி: ''பத்தாண்டுகளுக்கு முன் அறிவியல் தொழில்நுட்பத்துறையில் உலக அளவில் 81 வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 39- வது இடத்திற்கு முன்னேறி உள்ளது,'' என, சிவகாசியில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசினார்.
சிவகாசி காளீஸ்வரி கல்லுாரியில் மாநில அளவிலான இளைஞர் வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் மாநாடு 3 நாட்கள் நடந்தது. கல்லுாரி செயலர் செல்வராஜன் தலைமை வகித்தார். இதில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன முன்னாள் இயக்குநரும், மங்கள்யான், சந்திராயன் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை பேசியதாவது:
உலக நாடுகள் மொத்த வருவாயில் 3 சதவீதம் வரை அறிவியல் தொழில்நுட்பத்துக்கு ஒதுக்கும் நிலையில் இந்தியா 0.9 சதவீதம் வரை மட்டுமே ஒதுக்குகிறது. இவ்வளவு குறைந்த நிதியிலும் இந்தியா விண்வெளி சந்திரயான், மங்கள்யான் உட்பட செயற்கைக்கோள் ஏவுதலில் முன்னணியில் உள்ளது.
அரசு மட்டும் இன்றி தனியார் நிறுவனங்களும் அறிவியல் ஆராய்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு ரூ.ஒரு லட்சம் கோடி ஒதுக்கி உள்ளது.
விளையாட்டு துறையில் சாதிப்பது போல் அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஆர்வமுடன் பங்கேற்க வேண்டும். இந்த மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வு கட்டுரைகள் மற்றும் கண்டுபிடிப்புகள் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லப்படும். இவ்வாறு அவர் பேசினார்.