ADDED : செப் 17, 2025 12:45 AM
திருச்சுழி : திருச்சுழி அருகே எம்.ரெட்டியபட்டியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூ.,வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
திருச்சுழி ஒன்றிய செயலாளர் செல்வம் தலைமை வகித்தார். பொருளாளர் ஜீவானந்தம் , நிர்வாகிகள் அய்யனார் ,சரத்குமார் கலந்து கொண்டனர். மாவட்ட செயலாளர் செந்தில்குமார் பேசினார். உழவர் சந்தை அமைக்கவும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் இரவு நேரங்களில் மருத்துவர்் சிடி., ஸ்கேன் வசதி ஏற்படுத்துவது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது. இது குறித்து திருச்சுழி பி.டி.ஓ., புகழேந்தியிடம் மனு அளித்தனர்.
* ஸ்ரீவில்லிபுத்துாரில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில், நகரில் 3 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் சப்ளை செய்ய கோரி காலிகுடங்களுடன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
நகர செயலாளர் தனலட்சுமி தலைமை வகித்தார். தலைவர் உமா மகேஸ்வரி, பொருளாளர் கலைச்செல்வி முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர் ரேணுகாதேவி பேசினார். திரளான பெண்கள் பங்கேற்றனர்.