/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
எஸ்.ஐ.ஆர்., பதிவுக்கு தனி ஆப்பரேட்டர்கள்; ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் கோரிக்கை

ADDED : நவ 19, 2025 07:46 AM
விருதுநகர்: தமிழகத்தில் எஸ்.ஐ. ஆர். பணிகள் நடந்து வரும் சூழலில் இதற்கென தனியாக டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்களை நியமனம் செய்ய வேண்டும், என தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில தலைவர் காந்திமதிநாதன் வலியுறுத்தியுள்ளார்.
அவர் கூறியதாவது: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி அவசர கதியில் நடந்து வருகிறது. கூடுதல் கால அவகாசம் வேண்டும். 2026 சட்டசபை தேர்தலுக்கு பிறகு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை தேர்தல் ஆணையம் செய்ய வேண்டும்.
மேலும் வாக்காளர் பட்டியல், சிறப்பு தீவிர திருத்த பணிகளை செய்யும் பி.எல்.ஓ., வருவாய்த்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு மதிப்பூதியம் வழங்க வேண்டும். படிவங்களை இணையத்தளத்தில் பதிவு செய்வதற்காக டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் தனியாக நியமனம் செய்ய வேண்டும்.
வளர்ச்சி துறையில் பணிபுரியும் கணினி உதவியாளர்கள் உள்ளிட்ட பணியாளர்களை இப்பணிகளில் ஈடுபடுத்துவதன் மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப் பட்டுள்ளது.
எனவே எஸ்.ஐ.ஆர்., பணிக்கு என தனியாக டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் நியமனம் செய்ய மாவட்ட தேர்தல் அலுவலர்களான கலெக்டர்கள் உரிய வழிகாட்டுதல்கள் வழங்க வேண்டும், என்றார்.