ADDED : ஜன 09, 2024 12:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார், : ஸ்ரீவில்லிபுத்துார் லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சிறார்களுக்கான சாரண, சாரணியர் இயக்கம் துவக்க விழா நடந்தது.
பள்ளி தாளாளர் வெங்கடாசலபதி தலைமை வகித்தார். சாரண, சாரணியர் இயக்கத்தை மாவட்ட கல்வி அலுவலர் ஜான் பாக்கிய செல்வம் துவக்கி வைத்தார். 350 மாணவர்கள், மாணவியர்கள் ஆர்வத்துடன் இயக்கத்தில் இணைந்தனர்.
லயன் சங்க உறுப்பினர்கள் முனியாண்டி, ரஞ்சித், மாவட்ட சாரண சாரணியர் இயக்க செயலாளர் ராமசுப்பிரமணியன், மாவட்ட ஆணையர் ஜோதிமணி ராஜன், சிறார்கள் மாவட்ட ஆணையர் சுந்தர மகாலிங்கம், இயக்க பொறுப்பாசிரியர்கள் பங்கேற்று மாணவர்களை வாழ்த்தினர்.