/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நுாலகத்தை செயல்படுத்த வலியுறுத்தல்
/
நுாலகத்தை செயல்படுத்த வலியுறுத்தல்
ADDED : நவ 30, 2024 05:57 AM

சாத்துார்; சாத்துார் அருகே நல்லான்செட்டிபட்டியில் தங்கும் இடமாக பயன்படுத்தி வரும் நுாலக கட்டடத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
நல்லான்செட்டிபட்டியில் நுாலக கட்டடம் கட்டப்பட்டதோடு சரி நுாலகம் செயல்பாட்டிற்கு வரவில்லை. காட்சி பொருளாக மாறிய நுாலக கட்டடத்தை மக்கள் தற்போது ஓய்வு எடுக்கும் அறையாக பயன்படுத்தி வருகின்றனர். இங்குள்ள படித்த இளைஞர்கள் போட்டி தேர்வுக்கு படிப்பதற்காக வெளியிடங்களில் உள்ள நுாலகங்களுக்கு சென்று வருகின்றனர். ஆனால் இங்குள்ள நுாலகம் செயல்பாட்டிற்கு வராமல் உள்ளது நுாலகத்தில் புத்தகம் வைக்கும் ரேக்குகள் துருபிடித்து வீணாகி வருகிறது.
எனவே மாவட்ட நிர்வாகம் நுாலகத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்