/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வாழை, வெங்காயம் பயிருக்கு காப்பீடு
/
வாழை, வெங்காயம் பயிருக்கு காப்பீடு
ADDED : ஆக 07, 2025 07:05 AM
விருதுநகர் : கலெக்டர் சுகபுத்ரா செய்திக்குறிப்பு:
பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம், மாவட்டத்தில் வாழைப்பயிருக்கு மங்களம், திருத்தங்கல், நத்தம்பட்டி ஆகிய குறுவட்டங்கள், வெங்காயம் பயிருக்கு காரியாபட்டி, முடுக்கன்குளம், மல்லி ஆகிய குறுவட்டங்களுக்கு செயல்படுத்தப்பட உள்ளது. இதில் கடன் பெறும் விவசாயிகள் அவர்கள் கடன் பெறும் வங்கிகளில் கட்டாயமாகப் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்யப்படுவர்.
கடன் பெறா விவ சாயிகள் இத்திட்டத்தை செயல்படுத்தும் காப்பீட்டு நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலமாகவோ, பொது சேவை மையங்கள் மூலமாகவோ, வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம்.
காப்பீடு கட்டணமாக வாழை ஏக்கருக்கு ரூ.4426ஐ செப். 1க்குள்ளும், வெங்காயம் ஏக்கருக்கு ரூ.1573ஐ செப். 16க்குள் பதிய வேண்டும், என்றார்.