ADDED : ஜூன் 28, 2025 11:22 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்:விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையில் மனநலத்துறையின் சார்பில் போதைப் பொருள் கடத்தலுக்கு எதிரான சர்வதேச போதை தடுப்பு தினம் அனுசரிப்பு டீன் ஜெயசிங் தலைமையில் நடந்தது. இதில் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ, செவிலிய மாணவர்கள் போதைப் பொருளுக்கு எதிராக உறுதிமொழி எடுத்தனர்.
கண்காணிப்பாளர் அரவிந்த்பாபு, துணைக் கண்காணிப்பாளர் அன்புவேல், ஆர்.எம்.ஓ., கணேஷ்குமார், துணை ஆர்.எம்.ஓ., ஸ்ரீதரன், மருத்துவர்கள் ராஜசேகரன், பூங்கொடி, நிரஞ்சனா தேவி, சதீஷ் சங்கர், செவிலிய கண்காணிப்பாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். மனநலத்துறை தலைவர் காட்சன் நன்றி கூறினார்.